டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சூரிச் நோக்கி சென்ற சுவிஸ் ஏர் விமானம், ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது இன்ஜின் கோளாறு மற்றும் புகை வெளியேறுதல் கண்டறியப்பட்டதால் திடீரென நிறுத்தப்பட்டது.
ஏப்ரல் 25 அன்று 232 பயணிகள் மற்றும் 13 ஊழியர்களுடன் விமானம் புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடுபாதையில் சென்றபோது விமானி இன்ஜின் பழுதை உணர்ந்ததுடன், விமானத்தின் இடதுபுறத்தில் புகை வெளியேறுவதையும் கவனித்தார்.
இதையடுத்து விமானம் உடனடியாக ஓடுதளத்திலேயே நிறுத்தப்பட்டு, அவசரகால சறுக்குப்பாதைகள் மூலம் பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இச்சம்பவத்தில் 6 பயணிகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தையடுத்து டெல்லி விமான நிலையத்தின் ஓடுதளம் 28 நீண்ட நேரத்திற்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது.





