இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வின் ஹால் டிக்கெட் ஏப்.27 காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. இதற்கு முன் இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வாக நீட் யூஜி நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு மே 3-ம் தேதி நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் சுமார் 28 லட்சம் மாணவ, மாணவியர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மாணவர்கள் neet.nta.nic.in இணையதளத்தில் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.





