மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பிரபல பாப் பாடகி ரிஹானா கலந்து கொண்டு ஆரத்தியில் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது அழகுசாதனப் பிராண்டான ‘பென்டி பியூட்டி’ தொடர்பான விளம்பர நடவடிக்கைகளுக்காக ரிஹானா இந்தியா வந்துள்ளார். அதன் ஒரு பகுதியாக அவர் அம்பானி இல்லத்திற்கு வருகை தந்தபோது, பாரம்பரிய நடன நிகழ்ச்சியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் நடைபெற்ற பூஜையில் ஈஷா அம்பானி, ஸ்லோகா மேத்தா, ராதிகா மெர்ச்சன்ட், ஆனந்த் அம்பானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சமூக வலைதளங்களில் பரவும் காணொளிகளில் ரிஹானா மலர்களை தூவி, குடும்பத்தினருடன் இணைந்து நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பூஜை முடிந்ததும் அவருக்கு பிரமாண்ட மதிய உணவு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக் காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கவனம் பெற்றுள்ளன.

இதற்கு முன், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த் அம்பானி–ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழா தொடர்பான நிகழ்ச்சியில் பாடுவதற்காக ரிஹானா இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.