தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப்.26) காலை கொடைக்கானலில் நடைபயிற்சி மேற்கொண்டார். அவரை காண வந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் அருகில் சென்று செல்பி எடுத்துக் கொண்டனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினுடன் கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார். பாம்பர்புரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அவர் தங்கியுள்ளார்.
கொடைக்கானல் பகுதிகளில் தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்ததாக தெரிவிக்கப்பட்டது. முதல்வர் ஏப்.29 வரை கொடைக்கானலில் ஓய்வில் இருப்பார் என கூறப்படுகிறது.
அவர் தங்கியுள்ள விடுதியைச் சுற்றி பலத்த காவல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் சென்னை திரும்பும் வரை கொடைக்கானல் நகரப் பகுதியில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.





