இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சூரிய மின்சக்தி செல்கள் மற்றும் மாட்யூல்களுக்கு 123.04% தற்காலிக பொருட்குவிப்பு (Anti-dumping) வரி விதிப்பதாக அமெரிக்க வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.
முந்த்ரா சோலார் எனர்ஜி, முந்த்ரா சோலார் பி.வி., கோவா, பிரிமியர் எனர்ஜிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பான விசாரணையில் “முக்கியமான சூழ்நிலைகள்” கண்டறியப்பட்டதாக கூறி, இந்த பூர்வாங்க வரி விதிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்தது.
மேலும், உத்தரவு வெளியிடப்படுவதற்கு முன் 90 நாட்களுக்குள் அனுப்பப்பட்ட சில சரக்குகளுக்கும் இந்த ஆணை பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு தேசிய சூரிய மின்சக்தி கூட்டமைப்பின் தலைமை செயல் அதிகாரி சுப்ரமணியம் புலிபாகா, விசாரணை முடிவுகள் அடிப்படை ஆதாரமற்றதாகத் தோன்றுவதோடு தர்க்கரீதியாகவும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருப்பதாக கூறி, கூட்டமைப்பு முறையீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இந்திய சூரிய மின்சக்தி உற்பத்தியாளர் சங்கத்தின் பொதுச்செயலர் அமித் மனோகர், சர்வதேச வர்த்தக ஆணையத்தில் முறையிட உள்ளதாகவும், சாதகமான தீர்ப்பு வரும் என நம்புவதாகவும் கூறினார்.





