சென்னை: தமிழக பா.ஜ. தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, தமிழக அரசியலில் ஜாதி மற்றும் பணம் முக்கிய இயக்க சக்திகளாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
தன் அறிக்கையில், சட்டசபை தேர்தல்களில் ஜாதி, பணம், ஆள் பலம் போன்றவை தீர்மானிக்கும் காரணிகளாக இருந்ததாகவும், “ஜாதியை ஒழித்துவிட்டோம்” என்ற பேச்சுகளுக்கிடையிலும் தமிழகத்தில் ஜாதி இல்லாமல் அரசியல் இல்லை எனவும் அவர் கூறினார்.
“திராவிட மாடல்” அரசியல் அதிகாரம், சொத்து குவிப்பு, குடும்ப முன்னேற்றம் ஆகியவற்றுக்காக ஜாதி அடிப்படையிலான அரசியலை கட்டமைத்ததாகவும், வெளியில் ஜாதி பெயர்களை நீக்குவது போன்ற நடவடிக்கைகள் பேசப்பட்டாலும், கட்சிகளில் பதவிகள், ஆட்சியில் பொறுப்புகள், அரசு நிர்வாக நியமனங்கள் ஆகியவை ஜாதி ரீதியாகவே வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் ராமானுஜர், பாரதியார், ராஜாஜி, அம்பேத்கர் ஆகியோரின் சீர்திருத்தப் பாரம்பரியங்கள் மறைக்கப்பட்டு, ஜாதிய அரசியல் வலுப்படுத்தப்பட்டதாக கூறிய அவர், இனி தமிழக அரசியல் பாதையை ஜாதி மற்றும் பணமே நிர்ணயிக்கும் என தெரிவித்தார்.





