மே 1 மற்றும் 2 தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெளியிட்ட அறிக்கையில், ஏப்ரல் 27 முதல் 29 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
ஏப்ரல் 30 அன்று நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்தது.
மேலும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் நிலவும் காரணமாக கடலோர தமிழகத்தின் சில இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் அசவுகரியம் ஏற்படக்கூடும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




