தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கைக்கான நடைமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணையத்தின் தகவலின்படி, மாநிலம் முழுவதும் 62 மையங்களில் எண்ணிக்கை நடைபெறும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும்; காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கும்.
ஒவ்வொரு மையத்திலும் ஒரு பகுதியில் தபால் ஓட்டுகளும், மற்றொரு பகுதியில் EVM ஓட்டுகளும் தனித்தனியாக எண்ணப்படும். 500 தபால் ஓட்டுகளுக்கு ஒரு மேஜை என்ற விகிதத்தில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தபால் ஓட்டுகள் எண்ணும் பணி முழுமையாக முடிந்த பிறகே, EVM ஓட்டுகளின் இறுதிச்சுற்று எண்ணிக்கை தொடங்கும் என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
மேலும், தேர்தல் பணியில் ஈடுபட்ட 3.60 லட்சம் பேரில் 2.88 லட்சம் பேர் தபால் வாக்கு செலுத்தியுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.




