ஈரான் தொடர்பான போரிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதற்காக எந்த உத்தியை பின்பற்றுகிறது என்பது தெளிவாக இல்லை என்று ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார். இதனால் நிலைமை மேலும் சிக்கலாகி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் பேசும்போது, அமெரிக்காவின் அணுகுமுறை குறித்து தெளிவு இல்லாததே மோதலின் சிக்கலை அதிகரிக்கிறது என மெர்ஸ் குறிப்பிட்டார். மேலும், ஈரான் நாம் நினைத்ததை விட வலுவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஈரான் மக்கள், அவர்களது தலைவர்களால் அவமானப்படுத்தப்படுகின்றனர் என்றும், பதற்றம் நிலவும் சூழலிலும் ஈரான் புத்திசாலித்தனமாக பேச்சுவார்த்தை நடத்துகிறது என்றும் மெர்ஸ் கூறினார்.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறி, இது உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்தார். ஈரான் தொடர்பான விவகாரத்தில் நிதானம் கடைபிடிக்க வேண்டும் என்றும், இந்த மோதல் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





