சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் திங்கள்கிழமை காலை, பிரதமர் நரேந்திர மோடி இளம் வீரர்களுடன் நட்புறவு கால்பந்து ஆட்டத்தில் கலந்து கொண்டு மகிழ்ந்தார். அந்த தருணங்களின் புகைப்படங்களை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில், அவை இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி சிக்கிமுக்கு இருநாள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். மாநிலம் உருவான 50 ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.

மேலும், சுமார் ரூ.4,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை சிக்கிம் மக்களுக்கு அர்ப்பணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தன் பதிவில், காங்டாக்கில் “இளம் நண்பர்களுடன்” கால்பந்து விளையாடி நாளை தொடங்குவது போல மகிழ்ச்சி தருவது வேறு இல்லை என மோடி குறிப்பிட்டார். அந்த பயிற்சி தனக்கு உற்சாகமும் புத்துணர்ச்சியும் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.