மத்திய அரசின் உத்தரவின்படி, வீடுகளுக்கு புதிய சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர் இணைப்புகளை வழங்குவதை எண்ணெய் நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
மேற்காசிய நாடுகளில் மார்ச் தொடக்கத்தில் ஏற்பட்ட போர் பதற்றத்தால் இந்தியாவுக்கு எரிபொருள் கொண்டு வரும் கப்பல் போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மார்ச் 9 முதல் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதுடன், வீட்டு சிலிண்டர் முன்பதிவு இடைவெளியும் உயர்த்தப்பட்டது.
அதன்படி, முன்பதிவு இடைவெளி 21 நாட்களிலிருந்து நகரங்களில் 25 நாட்களாகவும், கிராமங்களில் 45 நாட்களாகவும் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், ஏற்கனவே சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கூடுதல் சிலிண்டர்களுக்காக பிறரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி புதிய இணைப்புகளை பெறுவதாக புகார்கள் வந்துள்ளன. பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர், விநியோகம் சீரானதும் புதிய இணைப்புகள் மீண்டும் வழங்கப்படும் என தெரிவித்தார்.





