சென்னை: “தமிழகம் என்றாலே சாதனை; சாதனை; சாதனை” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டு, திராவிட மாடல் தனித்துவமானது என தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசு கூறியவற்றை எண்களிலும் நிரூபித்து வருவதாகவும், திராவிட மாடல் ஒரு தனிச்சிறப்பு கொண்ட அணுகுமுறை என்றும் குறிப்பிட்டார்.
முதல் மூன்று ஆண்டுகளில் அடித்தளம் அமைத்ததாகவும், அதன் பின்னர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறப்பான நிர்வாகத்திற்கு துணை நின்ற தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், இது தொடக்கம்தான் என்றும் கூறினார்.
மற்ற இந்திய மாநிலங்களுடன் போட்டியிடுவது மட்டுமல்ல; தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழகம் உயர வேண்டும் என்பதே இலக்கு எனவும் ஸ்டாலின் கூறினார்.





