தமிழகத்தின் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2–3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் (ஆர்.எம்.சி) தெரிவித்துள்ளது.

அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், ஏப்.28 முதல் மே 2 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் பகல் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், அதிக வெப்பநிலுடன் அதிக ஈரப்பதமும் சேரும் நிலையில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசவுகரியம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 38–39 டிகிரி செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கும் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் அசவுகரியம் ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது.