தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) சார்பில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று ‘சத்ரு சம்ஹார யாகம்’ நடத்தப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையவும் அரசியல் எதிரிகளை வீழ்த்தவும் இந்த சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
த.வெ.க. வட்டாரங்களின் தகவலின்படி, கட்சி தலைவர் விஜய் ஹிந்து மத சடங்குகளில் அதிக நம்பிக்கை கொண்டவர்; முக்கிய முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளை ஜோதிடரிடம் ஆலோசித்து, அவர் குறிப்பிட்ட நேரத்தில் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.
கட்சி தொடங்கியதிலிருந்து ஜோதிட ஆலோசனை இன்றி விஜய் பெரிய நடவடிக்கைகள் எதையும் எடுத்ததில்லை என்றும், இதுவே அவரது வேகமான அரசியல் வளர்ச்சிக்கு காரணம் எனவும் அந்த வட்டாரங்கள் கூறின.
சட்டசபை தேர்தலில் பெரிய வெற்றி பெறவும், அரசியல் எதிரிகளை வீழ்த்தவும் சில சடங்குகள் செய்ய வேண்டும் என ஜோதிடர் ஆலோசனை வழங்கியதைத் தொடர்ந்து இந்த யாகம் திட்டமிடப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
விஜய் சார்பில் த.வெ.க. பொதுச்செயலர் ஆனந்த் இந்த யாகத்தை நடத்த உள்ளார்; விஜய்க்கு நெருக்கமான சிலரும் இதில் பங்கேற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.





