பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை உத்தரபிரதேசம் சென்ற நிலையில், ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிவபெருமானை வழிபட்டார்.

கோவிலுக்கு வந்த அவரை கோவில் நிர்வாகம் சார்பில் மேள, தாளம் முழங்க பாரம்பரிய முறையில் வரவேற்றனர்.

கோவிலில் நடைபெற்ற யாகத்திலும் பிரதமர் பங்கேற்றார்.

இதனைத் தொடர்ந்து, ஏப்.29 அன்று 594 கிலோமீட்டர் நீளமுள்ள கங்கா விரைவுச்சாலையை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்வில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.