சண்டிகரில் நடைபெற்ற டி-20 பிரீமியர் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி 222 ரன்கள் குவித்தது.

இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே ரன் வேகத்தை கையிலே வைத்துக்கொண்டு தொடர்ந்து ஸ்கோர் சேர்த்தது.

19.2 ஓவரில் 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டிய ராஜஸ்தான் அணி, ஜோரான வெற்றியை பதிவு செய்தது.

இந்த முடிவின் மூலம் பஞ்சாப் அணிக்கு தொடரில் முதல் தோல்வி ஏற்பட்டது.