தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கொடைக்கானலில் குறுகிய ஓய்வுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை சென்னை திரும்பினார். அவர் அங்கு தனியார் விடுதியில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் ஓய்வெடுக்க, குடும்பத்தினருடன் ஏப்.24 அன்று கொடைக்கானலுக்கு சென்றார். தங்கியிருந்த நாட்களில் தினமும் காலை நடைபயிற்சி மேற்கொண்டு, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுடன் இயல்பாக உரையாடி, அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
ஏப்.29 அன்று தனியார் விடுதியிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பொதுமக்களிடமிருந்து மனுக்களையும் பெற்றார்.
மதியம் 12 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்த முதல்வர், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.




