த.வெ.க. தலைவர் விஜய், செவ்வாய்க்கிழமை (ஏப்.29) மஹாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
அவரது வருகை குறித்து தகவல் வெளியானதைத் தொடர்ந்து, கோவில் வளாகத்தில் அவரை காண ஏராளமானோர் திரண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்தினம் அவர் திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்திருந்தார். தேர்தல் முடிவு வெளியாகும் முன் ஆன்மிக தலங்களுக்கு விஜய் சென்று வருவதாக த.வெ.க. தரப்பினர் கூறி வருகின்றனர்.
மேலும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் முன்பாக அவர் இன்னும் சில கோவில்களுக்கும் செல்லக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.





