முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பின்னர் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன், சமீபத்தில் பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி. சுதா ராமகிருஷ்ணன், பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்த நாளை “கருப்பு நாள்” எனக் குறிப்பிட்டார். உச்ச நீதிமன்றம் அவரை விடுவித்திருந்தாலும், இது தவறான முன்னுதாரணமாக அமையும் என அவர் கூறினார்.
மேலும், பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மனு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு முன்னாள் தலைவர் மற்றும் செய்தித் தொடர்பாளர் சந்திரசேகரன், இந்த நிகழ்வு காங்கிரஸை நேசிப்பவர்களுக்கும் ராஜிவை நேசிப்பவர்களுக்கும் வேதனையை தருவதாக கூறினார். சில வகை குற்றச்சாட்டுகளுக்குள்ளானவர்களை வழக்கறிஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஒப்பிட்டு, பேரறிவாளனின் பதிவை பார் கவுன்சில் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.





