மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தல் நாளில் ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு இல்லை என கூறி, மத்திய படைகள் வாக்காளர்களை அச்சுறுத்தி தாக்குவதாக குற்றம்சாட்டினார்.

கோல்கட்டாவில் பேசிய அவர், பல இடங்களில் தடியடி நடந்ததாக தெரிவித்தார். மேலும், நீதிமன்ற உத்தரவுகளை மீறி திரிணமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தொண்டர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அனைத்து ஓட்டுச்சாவடிகளையும் மத்திய படைகள் கைப்பற்றியுள்ளதாக கூறிய மம்தா, இது அவர்களின் பணியா என கேள்வி எழுப்பினார். சிஆர்பிஎப் படையினர் யாரையும் துன்புறுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

நேற்று இரவு முதலே அட்டூழியம் தொடங்கியதாக கூறிய அவர், கட்சியை சேர்ந்த பலரை காவலில் எடுத்துள்ளதாக தெரிவித்தார். இதை நீதிமன்ற அவமதிப்பு செயல் என குறிப்பிட்ட மம்தா, ஜனநாயகத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை பார்த்ததில்லை என்றும், டிஎம்சி வெற்றி பெறும் என்றும் கூறினார்.