முன்னாள் அமைச்சரும், தவெக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன், தமிழக அரசியலில் “அற்புதம் நடக்கப் போகிறது” என்று புதன்கிழமை தெரிவித்தார்.
நிருபர்களிடம் பேசிய அவர், தேர்தல்களில் கருத்துக் கணிப்புகள் பல இடங்களில் மாறுபடுவது வழக்கம் என்றும், கருத்துக் கணிப்பு என்பது சிலர் கூறும் மதிப்பீடு மட்டுமே என்றும் கூறினார்.
மேலும், தமிழகத்தில் உருவாகும் “மக்கள் அலை” தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும் இதுவரை இல்லாத அளவில் இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
தவெக தலைவர் விஜய் முன்னெடுக்கும் “விசில் புரட்சி” தமிழகத்தைத் தாண்டி உலக அளவிலும் தெரிய வரும் என்றும், விஜய் 200 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என்றும் செங்கோட்டையன் கூறினார்.
மே 4-ஆம் தேதி “விசில் சத்தம்” இந்தியாவே வியக்கும் அளவுக்கு இருக்கும் என்றும், வரவிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் என்றும் அவர் மீண்டும் தெரிவித்தார்.





