தமிழகத்தில் புதன்கிழமை மாலை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.14,100 ஆக உயர்ந்தது. இதனால் சவரன் (8 கிராம்) விலை ரூ.1,600 உயர்ந்து ரூ.1,12,800 ஆக விற்பனையானது.
இதற்கு முந்தைய நாள் செவ்வாயன்று தங்க விலையில் கடும் சரிவு பதிவானது. அன்று காலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.13,950 ஆகவும், சவரனுக்கு ரூ.1,200 சரிந்து ரூ.1,11,600 ஆகவும் விற்பனையானது.
செவ்வாயன்று மாலை மீண்டும் கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,900 ஆகவும், சவரன் விலை மேலும் ரூ.400 குறைந்து ரூ.1,11,200 ஆகவும் இருந்தது.
வெள்ளி விலையும் மாற்றங்களை கண்டது. முன்னதாக மாற்றமில்லாமல் இருந்த நிலையில், செவ்வாயன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.260 ஆக விற்பனையானது. பின்னர் புதன்கிழமை மாலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.270 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000 ஆகவும் விற்பனையானது.
புதன்கிழமை காலை தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், மாலையில் விலை உயர்வு ஏற்பட்டது.





