தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததுடன், வீடுகளில் ஏசி பயன்பாடு உயர்ந்ததால் மாநிலத்தின் மின் தேவை 21,211 மெகாவாட் என்ற புதிய சாதன அளவை எட்டியுள்ளது.

மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், இந்த உச்சம் ஏப்.28 இரவு 10.30 மணிக்கு பதிவானது. பல வீடுகளில் காலை முதல் நள்ளிரவு வரை மின் சாதனங்களின் பயன்பாடு அதிகமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

மார்ச் மாதம் தொடக்கம் கோடை காலம் தீவிரமாவதுடன் மின் தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மின் வாகனங்கள் பயன்பாடு அதிகரித்ததும், பள்ளிகளின் கோடை விடுமுறை மற்றும் ஐ.பி.எல். போட்டிகள் காரணமாக டிவி, ஏசி பயன்பாடு அதிகரித்ததும் இதற்கு காரணங்களாக குறிப்பிடப்பட்டன.

மேலும், வணிக சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சில ஹோட்டல்கள் மின் அடுப்புகளை அதிகமாக பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

சாதனை அளவிலான தேவையின்போதும், அதை பூர்த்தி செய்யும் அளவு மின்சாரம் இருந்ததால் மின் பற்றாக்குறை ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.