வாஷிங்டன்: துப்பாக்கியுடன் இருப்பது போலத் தோன்றும் புகைப்படத்தை பகிர்ந்து, இனி “நல்லவனாக” இருக்க மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானுடன் போர் நிறுத்தம் அமலில் இருப்பதாக கூறப்பட்டாலும், டிரம்ப் தொடர்ந்து கடுமையான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். ஈரான் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்யத் தவறியதாக அவர் குற்றம்சாட்டினார்.
தன் பதிவில், ஈரான் இன்னும் “சுதாரிக்கவில்லை” என்றும், அணு ஆயுதமற்ற ஒப்பந்தத்தில் எப்படி கையெழுத்திடுவது என்பதே அவர்களுக்கு தெரியவில்லை என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும், ஈரான் விரைவாக புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும், அணு ஆயுதம் இல்லாத ஒப்பந்தம் வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.




