சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தவெக கட்சி தலைவர் விஜய் வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஓட்டு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள் மற்றும் அவர்களது குழுக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், பிற கட்சியினர் மேற்கொள்ளக்கூடிய சதித்திட்டங்களை எவ்வாறு முறியடிப்பது மற்றும் வெற்றி கிடைத்தால் நிர்வாகத்தை எவ்வாறு சிறப்பாக நடத்துவது என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் பேசிய விஜய், வெற்றி பெற்றதும் எங்கும் சென்றுவிட வேண்டாம் என்று அறிவுறுத்தினார். வெற்றி பெற்றவர்கள் இரவு எந்நேரமானாலும் பனையூருக்கு வர வேண்டும்; “உங்களுக்காக நான் காத்திருப்பேன்” என்றும் கூறினார்.

தேர்தல் முடிவுகளை நம்பிக்கையுடன் எதிர்நோக்குமாறு கேட்டுக் கொண்ட அவர், அனைவரும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். மே 4-ம் தேதி ஓட்டு எண்ணிக்கையின் போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் நினைவூட்டினார்.