புத்த பூர்ணிமா இன்று (மே 1) கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் புத்தர் பிறந்த நாளும், அவர் ஞானம் பெற்ற நாளும் இணைந்து புத்த பூர்ணிமா எனக் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி தினம் புத்த பூர்ணிமா அல்லது புத்த ஜெயந்தி என உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது.

சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், பகவான் புத்தரின் உயரிய லட்சியங்களை நனவாக்குவதில் நாட்டின் உறுதிப்பாடு வலுவானது என மோடி கூறினார். புத்தரின் சிந்தனைகள் சமூகத்தில் மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையின் உணர்வை மேலும் வலுப்படுத்தட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாயிபாபாவின் ஆசிரமமான பிரசாந்தி நிலையத்தில் புத்த பவுர்ணமி விழா நடைபெறுகிறது. அங்குள்ள ‘சாய் குல்வந்த்’ அரங்கில் இன்று மற்றும் நாளை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.