சென்னை: கருத்துக்கணிப்புகள் தொடர்பாக எழும் பேச்சுகளுக்கு இடமளிக்க வேண்டாம்; ‘அதிக கற்பனைகள் தேவையில்லை’ என தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா வியாழக்கிழமை தெரிவித்தார்.

மே தினத்தை முன்னிட்டு சென்னையில் கேப்டன் விஜயகாந்த் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். இன்னும் இரண்டு நாட்களே உள்ளதாகவும், மே 4 அன்று முடிவு தெளிவாகத் தெரியும் என்றும் கூறினார்.

தேமுதிக மதச்சார்பற்ற வெற்றிக்கூட்டணியில் போட்டியிடுவதாக குறிப்பிட்ட பிரேமலதா, கூட்டணி அமோக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவார் என்றும் கூறினார்.

தேமுதிக மீது கடந்த ஆறு மாதங்களாக அதிக கவனம் இருப்பதாக கூறிய அவர், விமர்சனங்களுக்கு மே 4 அன்று பதில் அளிப்பேன் என்றும் தெரிவித்தார்.