ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய்பாபாவின் ஆசிரமமான பிரசாந்தி நிலையத்தில், இன்றும் நாளையும் புத்த பவுர்ணமி விழா நடைபெறுகிறது. நிகழ்ச்சிகள் ‘சாய் குல்வந்த்’ அரங்கில் நடத்தப்படுகின்றன.

இன்றைய காலை 8.00 மணிக்கு வேதம் தொடங்கி, விழா அறிமுகம், புத்த துறவிகள் ஊர்வலம், விளக்கு ஏற்றுதல், துறவிகளின் பூஜைகள் மற்றும் காணிக்கைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து புத்த துறவி கெம்போ சம்டுக் லாமாவின் உரை நடைபெற்று, பஜனை மற்றும் மங்களாரத்தியுடன் நிறைவடைகிறது.

மாலை நிகழ்ச்சிகளில் வேதத்திற்குப் பிறகு தம்மிக்கா கலபுகே உரை, பால விகாஸ் சிறுவர்களின் நடனம் மற்றும் தெய்வீக சொற்பொழிவு இடம்பெறுகிறது. பின்னர் பஜனை, மங்களாரத்தி நடைபெறுகிறது.

நாளை காலை வேதத்துடன் தொடங்கி, பாரம்பரிய நாட்டுப்புற இசைக்குழு ஊர்வலம், ‘ஓம் மணி பத்மே ஹும்’ மந்திரத்தின் கூட்டு முழக்கம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஸ்ரீ சத்யசாய் சேவா அமைப்பு (எஸ்.எஸ்.எஸ்.எஸ்.எஸ்.) ஹிமாச்சல பிரதேச தலைவர் பேராசிரியர் யோகிந்தர் வர்மாவின் உரை, புத்த தரிசனம் குறித்த காணொளி ஆகியவை இடம்பெற்று, பஜனை மற்றும் மங்களாரத்தியுடன் நிறைவடைகிறது.

நாளை மாலை வேதத்திற்குப் பிறகு ‘ரிதமிக் பீட்ஸ்’ பெண்கள் வழங்கும் இசை நிகழ்ச்சி, பால விகாஸ் மாணவர்களின் நடனம் நடைபெறுகிறது. இறுதியாக பஜனை மற்றும் மங்களாரத்தி நடைபெறுகிறது.