சென்னை: வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலையை மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் உயர்த்துவது சரியல்ல என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் முடிந்த உடனே வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதைத் தேர்தலுக்கு முன்பே தாம் கணித்ததாகவும் அவர் கூறினார். மேலும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது அதன் பலன் மக்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
மேற்காசிய பகுதியில் நடைபெறும் போரை முன்னிட்டு உருவான நெருக்கடியை காரணமாக்கி விலையை உயர்த்துவது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையாகும் என முதல்வர் தெரிவித்தார்.
இந்த விலை உயர்வால் ஏற்படும் தாக்கத்தை உணர்ந்து, அதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





