சென்னை: தவெக தலைவர் மற்றும் நடிகரான விஜய், மே 2 அதிகாலை வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4-ல் வெளியாக உள்ள நிலையில், விஜய் மேற்கொண்டு வரும் ஆன்மிகப் பயணம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

வேளாங்கண்ணி நிகழ்ச்சிக்குப் பிறகு, நாகூர் தர்காவில் வழிபாட்டிலும் விஜய் பங்கேற்க உள்ளார். மே 1 இரவே அவர் வேளாங்கண்ணிக்குப் புறப்படுவார் என கூறப்படுகிறது.

வேளாங்கண்ணியில் தனியார் ஓட்டலில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு சில தினங்களுக்கு முன், திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் ஷீரடி சாய்பாபாவையும் விஜய் வழிபட்டிருந்தார்.