காலிஸ்தானி தீவிரவாத குழுக்கள் கனடாவின் தேசியப் பாதுகாப்புக்கு தொடர்ந்த அச்சுறுத்தலாக உள்ளன என்று கனடா உளவுத்துறை பார்லிமென்டில் எச்சரித்துள்ளது.
அந்த அமைப்பின் மதிப்பீட்டின்படி, இக்குழுக்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளன; அவர்களின் தொடர்ச்சியான செயல்பாடுகள் பாதுகாப்பு கவலைகளை நீடிக்கச் செய்கின்றன.
மேலும், சில தீவிரவாத குழுக்கள் கனடா சமூகத்துடன் நல்ல தொடர்புகளை வைத்திருப்பதாகவும், கனடா நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தி வன்முறைத் தீவிரவாத திட்டங்களை வகுப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்திற்கு ஆதரவாக சில கனடியர்கள் சட்டபூர்வமான மற்றும் அமைதியான பிரசாரங்களில் பங்கேற்கின்றனர் என்றும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.





