தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 4 அன்று தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

வானிலை முன்னறிவிப்பின்படி, தேனி, திண்டுக்கல், கரூர், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, நாமக்கல், திருச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 2 அன்று தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது. மே 3 அன்று கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மே 5 அன்று தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மே 6 அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி; மே 7 அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி; மேலும் மே 8 அன்று நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.