தபால் அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு இனி ‘பான்’ எண்ணை குறிப்பிடுவது கட்டாயம் என தபால் துறை அறிவித்துள்ளது.
வருமான வரி விதிகள் 2026ன் கீழ் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்த புதிய விதிகளின் அடிப்படையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. உயர்மதிப்பு நிதி பரிவர்த்தனைகளை முறையாக கண்காணிப்பதற்கான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
கணக்கு தொடங்குதல், பணம் வைப்பு (டெபாசிட்), பணம் எடுத்தல் உள்ளிட்ட பெரிய தொகை தொடர்பான பரிவர்த்தனைகளில் பான் எண் அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் எண் இல்லாத டெபாசிட்தாரர்கள், வருமான வரி விதிகள் 2026ன் படி ‘படிவம் 97’ ஐ சமர்ப்பிக்க வேண்டும். அதில் பெயர், முகவரி, தொகை உள்ளிட்ட விவரங்களை நிரப்பி, தேவையான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்; இவற்றை தபால் அலுவலகங்கள் முழுமையாக சரிபார்க்க வேண்டும்.
மேலும், பான் இல்லாதவர்களுக்காக பயன்படுத்தப்பட்ட ‘படிவம் 60’ நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ‘படிவம் 97’ மற்றும் ‘படிவம் 98’ ஆகிய இரண்டு படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.





