அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் சிறிய ரக விமானம் மரங்களில் மோதி விபத்துக்குள்ளானதில், விமானத்தில் இருந்த 5 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமரில்லோ நகரைச் சேர்ந்த ஒரு பிக்கிள்பால் கிளப்பின் உறுப்பினர்களை ஏற்றிக்கொண்டு, அந்த விமானம் நியூ பிரான்பெல்ஸ் விமான நிலையத்தை நோக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில், ஆஸ்டினுக்கு தென்மேற்கே சுமார் 65 கி.மீ. தொலைவில் உள்ள விம்பர்லி நகரின் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் விமானி மற்றும் பிக்கிள்பால் வீரர்கள் 4 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் பெயர்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

லீக் போட்டியில் பங்கேற்பதற்காகப் பயணித்தபோது இந்த விபத்து நடந்ததாக அமரில்லோ பிக்கிள்பால் கிளப் தெரிவித்துள்ளது.