ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க முடியாது என்றும், அப்படி நடந்திருந்தால் மத்திய கிழக்கு மட்டுமல்ல ஐரோப்பாவும் ஆபத்தில் சிக்கியிருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

புளோரிடாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், அமெரிக்க பொருளாதாரம் குறித்து குறிப்பிட்டு பங்குச்சந்தை சாதனை உயரத்தில் இருப்பதாகவும், எண்ணெய் விலை குறைவாக இருந்ததாகவும் கூறினார். ஈரானிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கும் ஐரோப்பாவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டிரம்ப் கூறினார். இல்லையெனில் அந்தப் பகுதி நாடுகள் சிதறியிருக்கும் எனவும், ஈரானுக்கு கடற்படை மற்றும் விமானப்படை இல்லை எனவும், அதன் தலைவர்கள் “இப்போது இல்லை” எனவும் அவர் கூறினார்.

மேலும், ஈரான் தலைமையகம் கொடூரமானது என குற்றம்சாட்டிய டிரம்ப், 42,000 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறினார். ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் விரும்பியபடி முன்னேறவில்லை என்றும், ஈரானுக்கு இப்போது இரண்டு வழிகளே உள்ளன—பேச்சுவார்த்தை நிபந்தனைகளை ஏற்க வேண்டும் அல்லது மோதல் தீவிரம் அடையும் என்றும் அவர் எச்சரித்தார்.