தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தமிழக மக்களையும் அரசியல் வட்டாரங்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. சில கணிப்புகள் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி எனவும், மற்ற சில கணிப்புகள் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி எனவும் தெரிவிக்கின்றன. மேலும் விஜயின் த.வெ.க. ஆட்சி அமைக்கும் எனவும் சில கணிப்புகள் கூறுகின்றன.

இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டில்லியில் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் எந்த ஒரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காது என்பதே அவரது மதிப்பீடு என கூறப்படுகிறது.

தி.மு.க. கூட்டணியோ, அ.தி.மு.க. கூட்டணியோ அல்லது த.வெ.க.வோ—யார் ஆட்சி அமைத்தாலும் அது கூட்டணி ஆட்சியாகவே இருக்கும்; கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை அமைதியாக இருக்குமாறு கூட்டணி தலைவர்களிடம் அவர் கூறியதாகவும், முடிவுகள் வந்த பின் பேசலாம் என தெரிவித்ததாகவும் தகவல். அ.தி.மு.க. தலைவர்களுடன் அவர் ஏற்கனவே பேசியதாகவும் குறிப்பிடப்படுகிறது.