தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (தேஜ கூட்டணி) பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் சனிக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.
நிருபர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் தேஜ கூட்டணி “உறுதியான வெற்றியை” நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாக கூறினார். இதுபற்றி சந்தேகம் இருந்திருந்தால் டெல்லியிலிருந்து இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த முறை தமிழகத்தில் மாற்றம் வரும் என்றும், மக்கள் மாற்றத்தையும் வளர்ச்சியையும் விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு முழுவதும் வளர்ச்சி நடைபெறுகிறது; அதில் தமிழகமும் பங்கு பெற வேண்டும் என்று கூறிய அவர், தமிழக மக்கள் தேஜ கூட்டணிக்கு அதிகாரம் அளிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.





