ஹைதராபாத் மைதானத்தில் நடந்த பிரீமியர் லீக் போட்டியில், கொல்கட்டாவுக்கு எதிராக ஹைதராபாத் அணி 19 ஓவரில் 165 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
டாஸ் வென்ற ஹைதராபாத் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் அதிரடியாக தொடங்கினர். அபிஷேக் 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஹெட் மற்றும் இஷான் கிஷான் ரன் வேகத்தை உயர்த்தினர். ஹெட் 28 பந்துகளில் 61 ரன் எடுத்து அரைசதம் கடந்தார். மற்றொரு முனையில் கிஷான் 42 ரன்னில் வெளியேறினார்.
ஆனால் அதன் பின்னர் ஹைதராபாத் மிடில் ஆர்டர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து சரிந்தது. கொல்கட்டா தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் எடுத்தார்; சுனில் நரேன், கார்த்திக் தியாகி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அன்குல் ராய், வைபவ் அரோரா, க்ரீன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.





