தமிழக சட்டசபை தேர்தலில் அதிக ஓட்டுகளும் குறைந்த ஓட்டுகளும் பெற்று வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிக ஓட்டுகள் பெற்றவர்களில் சோழிங்கநல்லூரில் தவெக சார்பில் சரவணன் 2,19,972 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். மாதவரத்தில் தவெக விஜய் பிரபு 1,90,462 ஓட்டுகளும், ஆவடியில் தவெக ரமேஷ்குமார் 1,80,384 ஓட்டுகளும் பெற்றனர்.
மேலும் பூந்தமல்லியில் தவெக பிரகாசம் 1,61,309 ஓட்டுகளுடன் வென்றார். எடப்பாடியில் அதிமுக இபிஎஸ் 1,48,933 ஓட்டுகள் பெற்றார். கவுண்டம்பாளையத்தில் தவெக கனிமொழி சந்தோஷ் 1,46,466, மதுரவாயலில் தவெக ரேவந்த் சரண் 1,41,725 ஓட்டுகள் பெற்றதாக பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்த ஓட்டுகளுடன் வென்றவர்களில் துறைமுகத்தில் திமுக சேகர் பாபு 45,254 ஓட்டுகள் பெற்றார். ஊட்டியில் பாஜ போஜராஜன் 48,488 ஓட்டுகளும், குன்னூரில் திமுக ராஜூ 50,470 ஓட்டுகளும் பெற்று வெற்றி பெற்றனர்.
பட்டியலில் தொடர்ந்து தி.நகரில் தவெக ஆனந்த் 51,632, எழும்பூரில் தவெக ராஜ்மோகன் 53,901, வால்பாறையில் திமுக சுதாகர் 54,671 ஓட்டுகள் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திருமயத்தில் திமுக ரகுபதி 58,201, விளாத்திக்குளத்தில் திமுக மார்க்கண்டேயன் 58,395, ஸ்ரீவைகுண்டத்தில் தவெக சரவணன் 58,814 மற்றும் ஆயிரம் விளக்கில் தவெக ஜேசிடி.பிரபாகர் 58,965 ஓட்டுகள் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





