நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆட்சி அமைக்க தேவையான முழு பெரும்பான்மை தவெகக்கு கிடைக்கவில்லை. ஆட்சி அமைப்பதற்கு 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுவதால், பிற கட்சிகளின் ஆதரவு அவசியமாகிறது.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் கவர்னர் ராஜேந்திர அர்லேகருக்கு கடிதம் எழுதி, தனிப்பெருங்கட்சியாக உள்ள தவெகவை ஆட்சியமைக்க அழைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசம் வழங்குமாறும் அவர் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.