தமிழகத்தின் புதிய முதல்வராக நடிகர் விஜய் மே 7ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பிரமாண்ட பதவியேற்பு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட அவரது கட்சி 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததாக கூறப்படுகிறது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் குறைவாக இருந்தாலும், ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரை சந்திக்க அவர் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழா ஏற்பாடுகள் தொடங்கியுள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் குறித்து உயரதிகாரிகள் சென்னையில் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதில் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
அதே நாளில் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. யாருக்கு எந்த அமைச்சுப் பொறுப்பு என்பதற்கான ஆலோசனைகள் கட்சிக்குள் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





