தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அவசியம் என்பதால், கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதையடுத்து மே 5 அன்று சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், தேர்தலில் வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன், சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெரும்பான்மை எண்ணிக்கையை எட்டாத நிலையில், ஆட்சி அமைப்பதற்காக தவெகக்கு பிற கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.