சென்னையில் தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனை முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில் சட்டப்பேரவைக்கான தற்காலிக சபாநாயகரை தேர்வு செய்வது தொடர்பான நடைமுறைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனித்து போட்டியிட்டு 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், அரசியல் சூழல் பரபரப்பாக உள்ளது.

பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், ஆட்சி அமைக்க விஜய் ஆளுநரை சந்தித்து உரிமை கோர உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மே 7-ஆம் தேதி விஜய் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்கலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ள நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.