விசிக தலைவர் தொல். திருமாவளவன், நடிகர்-அரசியல்வாதி விஜய் மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப நல்லாட்சி வழங்குவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக தலைவர் விஜய் விசிக ஆதரவை கோரி கடிதம் எழுதியுள்ளதாக கூறினார். இதேபோல் இடதுசாரி கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் ஆலோசித்த பிறகே முடிவு எடுக்கப்படும் என்றும், அதற்கான ஆலோசனை நாளை நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திருமாவளவன் கூறினார். விஜய்க்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
விசிக நீண்ட காலமாக திமுக கூட்டணியில் பயணித்து வருவதாகவும், தற்போதும் அந்த நட்பு நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் நிலைப்பாடுகளை விட, கட்சிக்குள் ஆலோசித்து முடிவெடுப்போம் என்றார்.
இதற்கிடையில், தவெக அரசுக்கு பாமக ஆதரவு தருமா என்ற கேள்விக்கு பாமக தலைவர் அன்புமணி, “நன்றி, வணக்கம்” என்று மட்டும் கூறி விளக்கமின்றி புறப்பட்டுச் சென்றார்.





