தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை கோரி தவெக தலைவர் விஜய், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (கம்யூ.) மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி (விசிக) தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
234 உறுப்பினர்கள் கொண்ட தமிழக சட்டசபையில் பெரும்பான்மை பெற விஜய் தரப்பு இன்னும் 11 இடங்கள் குறைவாக இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இதன் பின்னணியில், தன் கூட்டணியில் சேருமாறு கம்யூ. கட்சிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணியில் கம்யூ. 5 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தவெக அழைப்பை ஏற்கலாமா என்பது குறித்து நாளை மறுநாள் செயற்குழுவை கூட்டி கம்யூ. முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ஆதரவு கோரி விஜய் காங்கிரஸ் தலைமையிடமும் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாகவும், இன்று ஆதரவு கடிதம் விஜய்க்கு வழங்கப்படலாம் எனவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கும் விஜய் கடிதம் எழுதியுள்ளார்; விசிக-க்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனர்.





