திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை த.வெ.க. தலைவர் விஜய் மே 18க்குள் ராஜினாமா செய்யக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். ஒரே நபர் ஒரு தொகுதியில் மட்டுமே எம்.எல்.ஏ. ஆக இருக்க முடியும் என்பதால், அவர் ஒரு தொகுதி பதவியை விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதிக்கு எளிதாகச் செல்ல முடியும் என்பதால், அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. ஆக தொடர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திருச்சி கிழக்கு பதவியை விலகி, விரைவில் ராஜினாமா கடிதம் அளிக்க உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் 14 நாட்களுக்குள் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்; இல்லையெனில் இரு பதவிகளும் தானாகவே காலியாகும் என கூறப்படுகிறது. விஜய் விலகிய பின் திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் வேட்பாளரை கவனமாகத் தேர்வு செய்ய த.வெ.க. தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





