தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் ஆட்சி அமைக்க தேவையான அளவு எம்எல்ஏ ஆதரவு கிடைக்கவில்லை என கூறப்படும் நிலையில், தேர்தல் பிந்தைய அரசியல் சூழல் மேலும் பதற்றமாகியுள்ளது.

இந்த நிலையில், 20க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி, அரசியல் வட்டாரங்களில் புதிய ஊகங்களை கிளப்பியுள்ளது.

இந்த ஏற்பாட்டை சிவி சண்முகம் செய்ததாக கூறப்படுகிறது. ஓ.எஸ். மணியன், தளவாய் சுந்தரம், மோகன், அருள்மொழி தேவன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வெங்கடாசலம் உள்ளிட்டோர் அங்கு தங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும் என இபிஎஸ்-க்கு சிவி சண்முகம் வலியுறுத்தியதாக கூறப்படும் சூழலில், இந்த நகர்வு கூடுதல் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று புதுச்சேரி சென்று எம்எல்ஏக்களை சந்திக்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.