சென்னை

தமிழகத்தில் ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயிடம் போதிய பெரும்பான்மை இல்லை என்று தமிழக கவர்னர் ஆர்.என். அர்லேக்கர் விளக்கியதாக ராஜ்பவன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆட்சி அமைக்க அழைக்குமாறு விஜய் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்திருந்தார். ஆனால், தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற்ற பின்னரே அழைப்பு வழங்க முடியும் எனக் கூறி, கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை.

இந்நிலையில், புதன்கிழமை விஜய் இரண்டாவது முறையாக கவர்னரை சந்தித்தார். கவர்னர் மாளிகைக்கு நேரில் அழைத்து பேசப்பட்ட சந்திப்பில், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் மீண்டும் வலியுறுத்தியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டாலே ஆட்சி அமைக்கும் நடைமுறை முன்னேறும் எனவும் ராஜ்பவன் தெரிவித்துள்ளது.