தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கோரி தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடிதம் எழுதியதாக வெளியான தகவல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுத்துள்ளது.
கட்சியின் மாநிலச் செயலர் சண்முகம் கூறுகையில், கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக த.வெ.க. தரப்பில் இருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என்றார். அப்படி கடிதம் வந்தால் கட்சியில் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருப்பதாக அவர் கூறினார்.
அதே நேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இருப்பதாகவும் சண்முகம் தெரிவித்தார்.





