ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, தமிழகத்தில் புதிய தேர்தலை நடத்துவது சிறந்த வழியாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளப் பதிவில், எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க போதுமான தொகுதிகள் கிடைக்காத நிலை ஏற்பட்டால், உருவாகும் அரசு பல்வேறு அழுத்தங்கள் மற்றும் இழுபறிகளால் நிலையற்றதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

அதனால் ஜனாதிபதி ஆட்சியுடன் புதிய தேர்தல் நடத்துவது நல்ல தீர்வாக இருக்கலாம் என்றும், இம்முறை ஓட்டுக்குப் பணம் இல்லாத வகையில் “மிகக் கடுமையான” நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அப்படி செய்தால் மக்கள் உண்மையில் என்ன தீர்ப்பளிக்கிறார்கள் என்பதை பார்க்க முடியும் என்றார்.

மேலும், தவெக தலைவர் விஜய் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று தாம் நினைப்பதாகவும், அதை திமுக மற்றும் அதிமுக தடுக்க விரும்பினால் அவர்கள் ஒன்றாகப் போராடட்டும் என்றும் அவர் எழுதினார்.

பாஜ குறித்து, அது தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும், ஒரு இடம் கூட கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்றும் கூறிய அவர், தமிழகத்தில் பாஜ புதிய தொடக்கத்தை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது; மக்கள் புதிதாகத் தீர்மானிக்கட்டும் என தெரிவித்தார்.